தமன்னா மனதில் ஒரு பெரும் ஏக்கம் நிரந்தரமாக குடியேறியுள்ளதாம். அது செல்லமாக ஒரு நாய்க்குட்டியை வளர்க்க வேண்டும் என்பது.
நாய் வளர்ப்பது என்பது திரையுலகில் ரொம்ப சகஜம். குறிப்பாக நடிகைகளுக்கு உற்ற துணைவனாக நாய்தான் இருந்து வருகிறது. ஒரே வீட்டில் ஏகப்பட்ட நாய்களை வளர்க்கும் நடிகைகளைப் பார்க்கலாம்.
அந்த வகையில் தமன்னாவுக்கும் ஒரு செல்லமான நாயை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். ஆனால் அதற்குத்தான் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டதாம்.
ஏனாம்?
கை நிறையப் படங்கள் இருப்பதால், தமிழிலும், தெலுங்கிலும் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் பிற இடங்களுக்குமாக பறந்து கொண்டிருக்கிறார் தமன்னா. இதனால் வீட்டில் ஓய்வாக இருக்க நேரமே கிடைக்கவில்லையாம்.
போகும் இடமெல்லாம் நாயைத் தூக்கிக் கொண்டு போக முடியாது என்பதால் நாயை வளர்க்கும் பாக்கியம் இதுவரை அவருக்குக் கிட்டவில்லையாம். இதுதான் அவருக்குப் பெரும் ஏக்கமாகியுள்ளதாம்.
ஒரு நாய்க்குட்டியை வளர்க்க துடியாய் துடித்து வருகிறேன். ஆனால் அதற்கான வாய்ப்புதான் இல்லாமல் போய் விட்டது. இது எனக்குப் பெரும் ஏமாற்றமாக உள்ளது என்கிறார் தமன்னா.
தயாரிப்பாளர்கள் மனது வைத்தால் தமன்னா தனது செல்ல நாயுடன் சென்று வர முடியும். செய்வார்களா ஏற்பாட்டை...